செய்துங்கநல்லூரில் பைத்துல்மால் டிரஸ்ட் சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் நிலவி வரும் டெங்கு காய்ச்சலை ஒழிக்க பல இடங்களில் தன்னார்வு தொண்டர்கள் நிலவேம்பு கசாயம் கொடுத்து வருகின்றனர். செய்துங்கநல்லூர் பைத்துல் மால் சார்பில் செய்துங்கநல்லூர் பஸ் நிலையம், ஸ்ரீரெங்க பெருமாள்கோயில் அருகில், ஜோஸ் தொடக்கபள்ளி, மேலநாட்டார்குளம் தூ.நா.தி.க. துவக்கப்பள்ளி உள்பட பல இடங்களில் நிலவேம்பு காசயம் வழங்கப்பட்டது. இதில் சுமார் 3 ஆயிரம் பேர் பயன் பெற்றனர். செய்துங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் நடந்த முகாமிற்கு பைத்துல்மால் செயலாளர் நாக்கிப் தலைமை வகித்தார். பொருளாளர் தாவூத் முன்னிலை வகித்தார். முஸ்தபா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் முன்தஸிர், தமீம், அப்பாஸ், முஸ்தாக், ஜாவித், யூசும், காலித்,அப்சர் உள்பட பலர் கலந்துகொண்டனர். சலீம், நன்றி கூறினார்.