
செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தில் வீட்டுக்குள் பதுங்கிய நல்லபாம்பை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர்.
நாட்டார்குளம் இசக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவர் தற்போது நெல்லையில் வசித்து வருகிறார். இதனால் இவர் வீடு பூட்டி கிடந்தது. இவர் நேற்று காலை 12 மணியளவில் தன் குடும்பத்தோடு வீட்டுக்கு வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது நல்லபாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது, அதை விரட்டியபோது அருகில் அடுக்கி வைக்கப்பட்டு தளக் கல்லுக்குள் புகுந்தது. இதனால் அவர் வல்லநாடு வனவர் கேசவனிடம் தகவல் தெரிவித்தார்.
வேட்டை தடுப்பு காவலர் கந்தசாமி, சரவணன், ஊர்வன பாதுகாப்பு காவலர் ரமேஷ்வரன் ஆகியோர் அங்கு வந்து பதுங்கி இருந்த நாகப்பாம்பு மீட்டு, வல்லநாடு மலையில் விட்டனர்.