செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மகளிர் தினவிழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். துணை முதல்வர் அன்சலாம் ரோசர் முன்னிலை வகித்தார். மின்னனுவியல் துறைத்தலைவர் வெர்ஜினா கடவுள் வாழ்த்து பாடினார். அலுவலக உதவியாளர் ரூபினா ஆரோக்கிய மேரி வரவேற்றார். மின்னியல் துறை ஆசிரியை பேச்சியம்மாள், ஆட்டோமொபைல் துறைத்தலைவர் ஜாய்ஸ் மேரி மற்றும் மூன்றாம் ஆண்டு மின்னியல் மாணவி மதுபாலா வாழ்த்துரை வழங்கினார்கள்.
மகளிர் தின சிறப்பு பாடலை இரண்டாம் ஆண்டு மின்னனுவியல் துறை மாணவி கிளாடிஸ் பாடினார். முதலாம் ஆண்டு ஆசிரியை பால பிரபா நன்றி கூறினார். நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டு மின்னனுவியல் மாணவி சுகந்தி தொகுத்து வழங்கினார். செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர், துறைத் தலைவர்கள் வெங்கடேஷ், அமலன், ஜாண்சென்பகத்துறை, அலுவலக கண்காணிப்பாளர் கணேசன், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் பணியாளர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


