
செய்துங்கநல்லூரில் அனைத்து சுற்றுவட்டார ஜமாத் இயக்கம் மற்றும் கட்சி கூட்டமைப்பு சார்பாக என்.ஆர்.சி. சி.ஏ.ஏ., என்.பி.ஆர் சட்டங்களை எதிர்த்து கடந்த 26.02.2019 முதல் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் ஷாஹின்பாக் தொடர் முழக்க போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 11வது நாளான நடைபெற்ற தொடர் முழக்க போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்தும், திரும்ப பெற வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் இந்தச்சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார அனைத்து ஜமாத் இயக்க கட்சிகள் கூட்டமைப்பு தலைவர் அப்துல்காதர் துவக்க உரையாற்றினார். தமுமுக மாவட்ட தலைவர் ஆஸாத் மற்றும் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த இபுராஹிமாம ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். சுஹைப் நன்றி கூறினார்.