செய்துங்கநல்லூர் நூலகத்தில் நூலக வார விழா நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். தொலைதொடர்பு துறை அதிகாரி முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சமூக சேவகர் நயினார் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வாசர்கள் சேர்க்கை நடந்தது. நூலக புரவலர்கள் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மணக்கரை போஸ்மாஸ்டர் காளிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் துரைராஜ் நன்றி கூறினார்.


