
செய்துங்கநல்லூரில் வெண்மணி தியாகிகள் நினைவு கொடி ஏற்றும் விழாவும், கல்வெட்டு திறப்பு விழாவும் நடந்தது.
அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்க கருங்குளம் ஒன்றியத்தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் குணேஷ்வரி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முக ராஜ் கொடிஏற்றினார்.
மாவட்ட துணை தலைவர் அப்பாககுட்டி நினைவுப் பெயர்ப் பலகையை திறந்து வைத்தார்.