பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் லூர்துராஜ் ஜெயசிங் தலைமை தாங்கி ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி புறநகர் வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன் துரைராஜ் தேவாசீர் முன்னிலை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆசிரியர் பயிற்றுநர் கிருஷ்ணவேணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்று பொன்னாடை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன் துரைராஜ் தேவாசீர், ஆசிரியர் பயிற்றுநர் கிருஷ்ணவேணி சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்கள் கிறிஸ்து பிறப்பின் பாடல்களைப் பாடினர். நடனம் மற்றும் நாடகம் நடித்து மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். கிறிஸ்மஸ் தாத்தா மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
கிறிஸ்து பிறப்பின் முன்னணைக் காட்சி மாணவர்கள் நடித்து காண்பித்தனர். பள்ளியின் தாளாளர் அனைத்து மாணவ, மாணவியருக்கும் புத்தாடை வழங்கினார். ஆசிரியை பெல்சிபாய் நன்றி கூறனார். தாளாளர் ஜெபித்து கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறினார். விழாவில் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் சிற்றுண்டி வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது,