செய்துங்கநல்லூரில் குடியரசு தினவிழாவையட்டி கொடியேற்று விழா நடந்தது.
செய்துங்கநல்லூர் நூலகத்தில் நடந்த கொடியேற்று விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். காரைக்குடி நூலகர் பாலமுருகன், வல்லநாடு நூலகர் தளவாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தோணி அப்துல்காதர் தேசிய கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஓய்வு பெற்ற சுகாதார அதிகாரி சண்முகம், ஓய்வு பெற்ற தபால் காரர் செல்லப்பா, நம்பி சுப்பையா, ஜுவா உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் லெட்சுமணன் நன்றி கூறினார்.


