செய்துங்கநல்லூரில் துப்புறவு தொழிலாளர்களுக்கு திமுக சார்பில் உதவி வழங்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செய்துங்கநல்லூர் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மாற்று திறனாளிகள் உட்பட 56 பேருக்கு கொரனா பற்றிய விழிப்புனர்வு மற்றும் மாஸ்க் அரிசி காய்கறி உணவு பொருள்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிககு திமுக கருங்குளம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார். அவை தலைவர் பட்டன், மாணவரணி தோணி அப்துல் காதர், தகவல் தொழில் நுட்ப அணி பட்டுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதிநாதன், ஊராட்சி செயலாளர் சங்கரபாண்டியன், வார்டு உறுப்பினர் துரை, முத்துசாமி, மாரியப்பன் கொம்பையா, இசக்கி, மாரியப்பன் வாத்தியார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.