
செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஆழிகுடியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் குடும்பத்துக்கு இலவச பொருள்கள் வழங்கினார்.
ஆழிகுடி ஆர்.சி.துவக்கப்பள்ளி தாளார் ராபின்சன், பள்ளி தலைமை ஆசிரியை ஜெஸி, ஆசிரியர் லூயிஸ் ராயன் ஆகியோர் இணைந்து தங்கள் பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் 31 பேர் குடும்பத்துக்கு கொரானா நிவாரண நிதி வழங்கினர். அதன் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடந்தது. ஆழிகுடி பஞ்சாயத்து தலைவர் முகேஸ்வரி தினேஷ் தலைமை வகித்தார். 10 வார்டு கவுன்சிலர் சுடலை முத்து முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்ஜெஸி பொருள்களை வழங்கினார்.
31 பேருககு தலா ஆயிரம் விதம் பொருள்கள் வழங்கப்பட்டது. ஆழிகுடி கிராம நிர்வாக அலுவலர் முருகன், செல்வ அந்தோணி, ஆசிரியை ரஞ்சிதா, ஆழிகுடி துரைப்பாண்டியன், சத்துணவு அமைப்பாளர் நேவிஸ், முருகன், ராபின், கனகராஜ், கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.