திருநெல்வேலி மண்டல அளவிலான ஐ.பி.ஏ.ஏ கால்பந்து போட்டி சேரன்மகாதேவி ஸ்கேட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
இந்த போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தினை சேர்ந்த 15 அணிகள் மோதின. இதில் இறுதிபோட்டியில் செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியும், நாகர்கோவில் மானிங் ஸ்டார் அணி மோதியது. இதில் 4 க்கு 3 என்ற கணக்கில் மானிங் ஸ்டார் அணி வெற்றி பெற்றது.
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி அணியினர் இரண்டாம் இடத்தினை பெற்றனர். இரண்டாம் இடம் பெற்ற செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி கால்பந்து அணியின் கேப்டன் ஜாபின், அணியினர், பயிற்சியாளர்கள் முதலாமாண்டு இயற்பியல் துறை பேராசிரியர் விஜயன் உடற்கல்வி இயக்குனர் ராகுல் ஆகியோரை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டிபன், முதல்வர் ஆவுடையப்பன், துணை முதல்வர் அன்சலாம் ரோசர் உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.