
செய்துங்கநல்லூரில் அ.ம.மு.க கொடியேற்று விழா நடந்தது.
கருங்குளம் ஒன்றிய அவை தலைவர் பிள்ள முத்து தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா, முன்னாள்சேர்மன் கோசல்ராம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஓ.பி.முஸ்பதா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் திருவரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். கழக அமைப்புச் செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா கழக கொடி ஏற்றினார்.
அதன் பின் ஊழியர் கூட்டம் செய்துங்கநல்லூர் வெங்கடேஸ்வரா மகாலில் வைத்து நடந்தது. ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி அமைப்பு , மண்டல கமிட்டி அமைப்பது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. கீழ நாட்டார்குளத்தினை சேர்ந்த மரியதாஸ், வேலுசாமி ஆகியோர் தலைமையில் 200 பேர் அ.ம.மு க கட்சியில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மண்டல பொறுப்பாளர் ஆர் பி ஆதித்தன் , தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் சுந்தரராஜ் , தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஹென்றி தாமஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் மனோராஜா , தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் சின்னதுரை , தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கணபதி பாண்டியன் , ஆலங்குளம் ஒன்றிய கழக செயலாளர் முருகையா பாண்டியன் , திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் வீரானம் வெள்ளத்துரை , தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருககண்ணன் , தூத்துக்குடி தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் குமார் . தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் முருகன், மாவட்ட பாசறை இணை செயலாளர் மாரிமுத்து, தலைமை கழக பேச்சாளர் பூல்பாண்டி, கரு ங்குளம் ஒன்றிய துணை செயலாளர் முத்தையா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜ் பாண்டியன், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் பரமசிவன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் பரமசிவன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மருதநாயகம், ஒன்றிய கழக பொருளாளர் ராஜா, வல்லநாடு ஊராட்சி கழக செயலாளர் குருநாதன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அரிசந்திரன், மாவட்ட தொழில் சங்க இணை செயலாளர் சந்தானம், ஒன்றிய பேரரவை இணை செயலாளர் முத்து பட்டு, ஒன்றிய அமைப்பு சாரா அணி ஓட்டுனர் அணி செயலாளர் குமார், பொந்தன் பொழி மாயாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர். பூல் பாண்டி நன்றி கூறினார்.