கருங்குளத்தில் காசநோயாளிகளுக்கு மருந்து அளித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசின் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
கருங்குளம் வட்டார அளவிலான காசநோயாளிகள் மற்றும் மருந்து அளிப்பவர்களுக்கான மாதாந்திர கூட்டம் கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடந்தது. மருத்துவ அலுவலர் டாக்டர்.முஹம்மது கனி தலைமை வகித்தார். உதவி மருத்துவ அலுவலர்கள் டாக்டர்.தினேஷ், டாக்டர்.நிரஞ்சனா தேவி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
எக்ஸ்ரே நுட்பநர் கிருஸ்டியன் குமாரதாஸ் வரவேற்றார்.
காசநோயாளிக்கு மருந்து அளித்த அரசர்குளம், சந்தையடியூர், மணல்விளை, திருவரங்கப்பட்டி அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசின் ஊக்கத் தொகை தலா ரூ.1,000- காசோலை வழங்கப்பட்டது. மருத்துவ அலுவலர் முஹம்மது கனி காசோலையை வழங்கினார்கள்.
மருத்துவமனை பணியாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
இதில் காசநோயாளிகள் மற்றும் அவர்களுக்கு மருந்து அளிப்பவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வல்லநாடு காசநோய் பிரிவு இணைந்து நடத்திய இந்த முகாமை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.


