வல்லநாடு அருகே உள்ள மணக்கரை சிவன் கோயில் மிகவும் பழமையானது.இந்த ஆலயத்தில் உழவாரப்பணி நடந்தது.
மணக்கரை மீனாட்சியம்மாள் சமேத சொக்கநாதர் ஆலயத்தில் உழவாரப்பணிநடந்தது. இந்தபணியின் போது கோயில் வளாகத்தில் உள்ள செடிகள் அகற்றப்பட்டது. சுவர்களில் வளர்ந்த மரங்கள் அகற்றப்பட்டது. இந்த பணியில் மணக்கரை ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் அன்பு, பாலு, கேவிபி வங்கி மேலாளர் சீனிவாசன் என்ற சிவா, உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு பூஜைகளை கண்ணன் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் நடத்தினர்.


