
செய்துங்கநல்லூர் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் அந்தோணி(வயது 36). கூலித்தொழிலாளி. இவரது உறவினர்கள் யாகப்பன் மகன்கள் செல்வராஜ், பட்டு. இவர்களுக்கும், அதேபகுதியைச்சேர்ந்த தாமஸ் மகன் செல்வராஜ் மற்றும் சவேரியார் மகன் பீட்டர் உள்ளிட்டோருக்கும் மன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் சேர்ந்து அந்தோணியை கடந்த 2016ம் ஆண்டு தாக்கி, அவரது வேன் கண்ணாடியை உடைத்தனர்.
இதுகுறித்து அந்தோணி மற்றும் தாமஸ் மகன் செல்வராஜ் இருவரும் ஒருவர் மீது ஒருவர் செய்துங்கநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி அந்தோணியை தாக்கிய தாமஸ் மகன் மற்றும் செல்வராஜ் மற்றும் பீட்டர் ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
இதே போல் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கில் யாகப்பன் மகன் செல்வராஜ்ககு 5 வருட சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், மற்றொரு மகன் பட்டுக்கு 1 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.