
ஆறாம்பண்ணையில் கொரோனா நிவாரணம் 2000 ஆயிரம் வழங்கும் பணியை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணம் ரூபாய் 2000 ஆயிரம் வழங்கும் பணி இன்றைய தினம் தொடங்கு என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை ஊராட்சி நியாயவிலைக் கடையில் நிவாரண நிதி முதல்கட்டமாக 2000 ரூபாய் வழங்கும் பணி நடந்தது. இந்த நிதியை ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அப்துல்கனி, வார்டு உறுப்பினர் இப்ராஹிம், மரியம் பானு, நியாய விலை கடை ஊழியர் சீனி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.