சேரகுளம் அருகே உள்ள சிரியந்தூரில் காட்டுப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கள்ளச்சாரயம் காய்ப்பதாக சேரகுளம் போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் சேரகுளம் சப்இன்ஸ்பெகடர் மகேஷ் மற்றும் போலிசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது அந்த அங்குள்ள தோட்டத்தில் கள்ளச்சாராயத்திற்காக ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அப்போது அங்கிருந்து இரண்டு பேர் போலீசிடம் இருந்த தப்பித்து ஓடினர்.
பின்னர் போலிசார் அந்த ஊறலை கீழே தள்ளி அழித்தனர். அதன் பின் தப்பியேடியவர்கள் யார். எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என அவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.