தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சாயர்புரம் பகுதியில் நேற்று மாலை அடித்த சூறைக்காற்றில் 1 லட்சத்திற்கும் மேலான வாழைமரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
ஏரல் அருகே உள்ள செபத்தையாபுரம், சாயர்புரம், இருவப்பபுரம் மற்றும் பேய்க்குளம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1 லட்சத்திற்கும் மேலாக வாழை பயிரப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அடித்த சூறைக்காற்றில் இந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஒரு லட்சத்திற்கும் மேலான வாழை மரங்கள் வாழைத்தாரோடு முறிந்து விழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


