
தியாகத் திருநாள் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நான்கு தினங்கள்(வெள்ளி முதல் திங்கள் வரை) நடைபெற்றது இதில் உள்ளூர் நான்கு அணிகள் ( மருதநாயகம், திப்பு சுல்தான், காயிதே மில்லத், பழனி பாபா.)கலந்து கொண்டு விளையாடினர்
இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது அதில் காயிதேமில்லத், திப்பு சுல்தான் அணிகள் மோதின காயிதே மில்லத் வெற்றி பெற்று *(Winner Cup)* வெற்றி கோப்பையையும், திப்பு சுல்தான் அணி இரண்டாம் இடம் பெற்று *(Runner Cup)* கோப்பையையும் தட்டி சென்றது. இறுதிப் போட்டி விழாவில் ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் *சேக் அப்துல் காதர்* , கருங்குளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் *K.இமாம் அலி* அவர்களும், ஆறாம்பண்ணை திமுக இளைஞர் அணி அமைப்பாளர் *இப்ராஹிம்* அவர்களும் , PSC சேர்மன் *உதுமான்,* துணை சேர்மன் *மீரான்* மற்றும் முன்னாள் கேப்டன்கள் *அசாருதீன், இர்ஃபான்* மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு *வெற்றிக் கோப்பையை* ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர் அவர்கள் வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு கோப்பையை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் *K. இமாம் அலி* அவர்கள் வழங்கினார்.
தொடர் நாயகன் விருது *இப்ராஹிம் கனி* அவர்களுக்கு ஆறாம்பண்ணை திமுக இளைஞர் அணி அமைப்பாளர் *இப்ராஹிம்* அவர்கள் வழங்கினார் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது *முபஷ்ஷிர்* அவர்களுக்கு முன்னாள் கேப்டன் அசாருதீன் அவர்கள் வழங்கினார் மற்றும் தொடர் போட்டிகளின் ஆட்டநாயகன் விருதை PSC சேர்மன் உதுமான், துணைச் சேர்மன் மீரான் ஆகியோர் வழங்கினார்கள் நான்கு நாட்கள் நடைபெற்ற தியாக திருநாள் கிரிக்கெட் போட்டியை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர் இறுதிப்போட்டி விழாவில் ஆறாம்பண்ணை பொதுமக்கள் மற்றும் PSC உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.