Description
தீதும் நன்றே – முத்தாலங்குறிச்சி காமராசு
(நாவல்) – சுவடு பதிப்பகம்
கொரோனா பெருந்தொற்று காலத்தில், மும்பையிலிருந்து ஒரு குடும்பம் திருநெல்வேலிக்குக் காரில் பயணிக்கிறது. மும்பையில் வசிக்கும், திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட சந்திரன் காரை ஓட்டி வர, அவருடன் கதையின் நாயகி முத்துக்கிளி மற்றும் அவரது தந்தை ரத்னம் ஆகியோர் வருகின்றனர். மற்றொரு காரில் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் மூவர் பின்தொடர்கின்றனர்.
அக்காலகட்டத்தில் மும்பையிலிருந்து நெல்லை வரை வரும் வழித்தடம் எவ்வாறு இருந்தது என்பதை நூலாசிரியர் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அத்துடன், கிராமத்தில் நடைபெறும் கோயில் கொடை விழா, அங்கு ஏற்படும் சிக்கல்கள், தனது முன்னாள் காதலியை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் வாசுவின் உணர்வுப்பூர்வமான தருணங்கள் எனப் பல சுவாரசியமான கதைக் களங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
பழமை மாறாத கிராமியச் சூழலை விரும்புவோரும், கொரோனா காலத்து அனுபவங்களை அறிய விரும்புவோரும் இந்த நூலைத் தாராளமாக வாசிக்கலாம்.






