கருங்குளத்தில் அதிக கட்டணம் வசூலிக்கு தனியார் பேருந்து மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பல தனியார் பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்துகளுக்கு கருங்குளத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்ல கட்டணம் ரூ 7 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழித்தடத்தில் செல்லும் ஒரு பேருத்தில் ரூ 10 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இது குறித்து கருங்குளம் கிராம மக்கள் நலக்குழு செயலாளர் உடையார் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரி, போக்குவரத்து துறை அமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து உடையார் கூறும் போது, எங்கள் பகுதியில் தனியார் பேருந்தில் ரூ 7 கட்டணம் என்பதை மனதில் வைத்தே பாமர மக்கள் ஸ்ரீவைகுண்டம் அரசுஅலுவலகம் மற்றும் ஆஸ்பத்திரி செல்ல பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தனியார் பேருந்து தீடீரென்று ரூ 10 கட்டணம் வசூல் செய்யும் போது பயணிகள் பெரும் பாதிப்படைகிறார்கள். எனவே அனைத்து தனியார்பேருந்திலும் சீராக ரூ 7 கட்டணத்தினை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
பெரும்பாலுமே அரசுபேருந்துகள் எஸ்.எப்.எஸ். என்ட் டூ என்ட், ஓன். டூ. திரி என பல பெயர்களில் எங்கே நிற்கிறது. எவ்வளவு கட்டணம் என தெரியாமல் நெல்லை & திருச்செந்தூர் வழிதடத்தில் இயங்கி வருகிறது. இதனால் இந்த பேருந்துகளை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தாமல் கூட்டம் அதிகமாக இருந்தாலும் கூட தனியார் பேருந்தை தான் பயன்படுத்தி வருகிறார். தற்போது தனியார் பேருந்திலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.