கலியாவூரில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி சட்ட விரோதமாக செயல்படும் காற்றாலை நிறுவனம் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் அருகில் புதிதாக அதிக அளவில் காற்றாலைகள் தனியார் நிறுவனம் வேகமாக அமைத்து வருகிறது.இதற்காக அதிக எடை கொண்ட கனரக வாகனங்களை வல்லநாடு வழியாக கொண்டு செல்கிறார்கள்.
இதனால் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உடப்பட்ட சீவலப்பேரி முதல் கலியாவூர் செல்லும் அரசு சாலையை பயன்படுத்துவதால் அதில் தற்போது புதிதாக போடப்பட்ட தார் சாலை முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
இதுகுறித்து பசுமை தமிழ தலைமுறை அமைப்பு நிறுவனர் மு.சுகன் கிறிஸ்டோபர்,கூறும் போது, கற்றாலை அமைக்க வேண்டும் என்றால் துனை இயக்குநர் ஊராட்சிஅலுவலகத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கியிருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்க்கு வங்கி வைப்பு தொகைக்கான பாண்ட் பத்திரம் வழங்கி இருக்க வேண்டும். அது தொடர்பான அனைத்து நிர்வாகத்திலும் முறையாக தகவல் தெரிவிக்கபட்டு தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் இந்த காற்றாலை நிறுவனம் இதுபோன்று எந்த நிர்வாக நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் அரசிற்கு பெரும் தொகை இழப்பு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறது.
எந்த தகவலும் தெரிவிக்காமல் சட்ட விரோதமாக செயல்படும் காற்றாலை நிறுவனத்தின் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி சாலைகளை சேதப்படுத்தியற்கும் விதிகளை சரியாக பின்பற்றாமல் செயல்பட்டதிற்கும் தனியார் காற்றாலை நிறுவனம் மீது தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை வைக்கிறோம்.
கலியாவூர் கிராம பாசன குளத்தின் அருகில் காற்றாலை நிறுவனம் சட்டவிரோதமாக குளத்திற்கு வரும் நீர்வழிப்பாதையை அடைத்து சுமார் ஆயிரம் லோடிற்கும் மேல் செம்மண் அடித்து பாதை அமைத்துள்ளது.
இதனால் குளத்திற்கு வரும் நீர்வழிப்பாதை முற்றிலும் தடைப்பட்டுள்ளது.இதனால் அந்த குளத்தை நம்பி விவசாயம் பார்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.
இந்த செயலுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி அரசிற்கு தெரியாமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சட்டவிரோத செயல் வரும் காலத்தில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். உடனடியாக தாங்கள் விரைவாக செயல்பட்டு காற்றாலை நிறுவனத்தின் சட்டவிரோத பணிகளை நிறுத்தி அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறேன் என்று கூறினார்.
கலியாயூர் பகுதியில் கற்றாலை அமைப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.