சேரகுளத்தில் துணை சுகாதர நிலையம் கட்ட அடிக்கல்லை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் நாட்டினார்.
சேரகுளத்தில் மிகவும் பழுதடைந்த நிலையில் துணை சுகாதர நிலையம் இயங்கி வந்தது. இந்த நிலையத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரி வந்தனர். எனவே அரசு தற்போது 20 லட்சம் செலவில் இந்த கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சேரகுளத்தில் நடந்தது. தூத்துக்குடி சுகாதர துணை இயக்குனர் கீதாராணி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அதிகாரி சுந்தரி வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தினை வழங்கினார். கருங்குளம் மருத்துவர் முகம்மது கனி நன்றி கூறினார்.
கருங்குளம் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் ஊட்டசத்து பெட்டகம், பிறப்பு சான்றிதழ், அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் உள்பட பல நலத்திட்டம் வழங்கப்பட்டது. மேலும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்யும் திட்டத்தின் கீழ் கருங்குளம் ஒன்றியத்தில் நியமிக்கப்பட்ட மோட்டார் பைக் சேவையை சண்முகநாதன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் கீதாராணி, வட்டார மருத்துவ அதிகாரி சுந்தரி, கருங்குளம் அரசு மருத்துவர் முகம்மது கனி, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ஜெஸி, சுகாதர ஆய்வாளர் சண்முக பெருமாள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல்,முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன், சுப்பையா பாண்டியன், சேகர், மாரியப்பன், அந்தோணி குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.