பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் கல்வி ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சீர்வரிசையுடன் அழைத்து வந்தனர். ஊரின் முக்கிய வீதி வழியாக பள்ளிக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பிள்ளைகளுடன் பள்ளிக்கு வந்தனர். சீர்வரிசை பொருட்களை பள்ளித் தாளாளர் லூர்துராஜ் ஜெயசிங் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரவியராஜ், முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் தனலெட்சுமி தாளாளருக்கு நினைவு பரிசு வழங்கினார். புதிய கல்வியாண்டு புத்தகத்தை தாளாளர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். விழாவில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர். ஆசிரியை பெல்சிபாய் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.