வல்லநாடு அருகே சிவசுப்பிரமணிய புரத்தினை சேர்ந்தவர் ஞானக்கண். இவரது மகன் ஜெபஸ்டின் தேவசகாயம்(36). இவருக்கு மனைவியும் இரண்டு பெண்குழந்தைகளும் உள்ளனர். இவர் சென்டிரிக் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிபழக்கம் உண்டு. எனவே வேலை பார்த்த பணம் முழுவதையும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் வீட்டு செலவுக்கு கஷ்டப்பட்ட மனைவி தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜெபஸ்டின் தேவசகாயம் நேற்று காலை 10 மணிக்கு அவர் வீட்டுக்குள் மண்ணென்னையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குஅவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முறப்பநாடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


