கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் பிரமிக்கத்தக்க நுண்ணுயிர் உலகை கண்களுக்குக்காட்சிப்படுத்தும் காகித மடிப்பு நுண்ணோக்கி ஒரு எளிய நுண்நோக்கி என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி முதல்வர் இறைவன் அருட்கனி அய்யநாதன் தலைமை வகித்தார். மண்ணியல் துறைத்தலைவர் முனைவர் சுரேஷ் வரவேற்றார். திருச்சி வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின்முன்னாள் முதல்வர் பாண்டியராஜன், பயிர் நோயியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கண்ணன், கல்லூரி கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில் குமார், முனைவர் எம்.கோமதி , முனைவர் கே.ஜி.சபரிநாதன் ஆகியோர் காகித மடிப்பு நுண்ணோக்கி குறித்து விளக்கம் அளித்தனர். செல்வி எம்.ஜெயஸ்ரீ, டி அருண் குமார் ஆகியோர் கருவியின் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். முனைவர் கோமதி நன்றி கூறினார் .
கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் இறைவன் அருட்கனி அய்யநாதன் தலைமையில் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கோமதி, கே.ஜி.சபரி நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.


