
மும்பை தாராவியில் இருந்து 2 கார் மூலம் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் தங்களது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருவரங்கபட்டி மற்றும் வெள்ளூர் வருகை தந்தனர்.
அவர்களை செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின் அவர்களை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் இன்று இருந்தால் மட்டுமே அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.