
மணிமுத்தாறு அணை 4 வது ரீச்சில் உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என தூத்துக்குடி ஆட்சியரை ( பொ) சந்தித்து விவசாயிகள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் அதன் தலைவர் நம்பிராஜன் என்பவரது தலைமையில் ஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில், சாத்தான்குளம் பகுதியில் தற்போது பெய்த மழையால் 3 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளோம். அந்த பயிர்கள் காப்பாற்றப்பட வேண்டுமெனில் மணிமுத்தாறு அணை 4 வது ரீச்சில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்.
அவ்வாறு திறந்தால் தான் நெற்பயிர்களை காப்பாற்ற முடியும். போதிய தண்ணீர் இல்லாததால் தென்னை மரங்கள் பட்டுப்போகும் நிலை உள்ளது. ஆகவே மணிமுத்தாறு அணை 4 வது ரீச்சில் உடனே தண்ணீர் திறக்க வேண்டும். 4 வருடங்களாக தண்ணீர் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.