கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர், புதுக்கோட்டை, வேதாரண்யம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. கஜா புயலின் கோரத்தாக்குதலால் அம்மாவட்டங்களை சேர்ந்த மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கஜா புயல் பாதித்த பகுதி பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியை-ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் தாமாகவே முன்வந்து நிவாரணப்பொருட்களை சேகரித்னர்.
அரிசி, பருப்பு, பிஸ்கட், சீனி, சோப்பு, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, பால்பவுடர், கோதுமை உள்பட ரூ.70ஆயிரம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பள்ளி தாளாளர் பால்ராஜ் தலைமையில் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் மாவட்ட முதன்மைகல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, அங்கிருந்து கஜா புயல் பாதித்த கிராமப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் மூத்த ஆசிரியை பொன்விக்டோரியா தலைமையில் பள்ளி முதல்வர் சுமதி மற்றும் ஆசிரியை-ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் செய்திருந்தனர்.