செய்துங்கநல்லூர் யூனியன் அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது.
கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சுப்புலெட்சுமி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் சாமதுரை முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட வட்டார மேலாளர் மல்லிகா வரவேற்றார். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுககு பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர்கள் செய்துங்கநல்லூர் பார்வதிநாதன், வி.கோவில்பத்து கொம்பையா, முத்தாலங்குறிச்சி பொன்இசக்கி, பஞ்சாயத்து தலைவர் வி.கோவில்பதது மாரியப்பன், ஆலந்தா மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கி¬ண்பாளர் பாக்கிய லெட்சுமி நன்றி கூறினார்.


