கருங்குளத்தில் உலக சுற்று சூழல் தினவிழா நடந்தது. கருங்குளம் ஆர்.சி.கோயில் தெருவில் நடந்த இந்த விழாவிற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜெபராஜ் தலைமை வகித்த்£ர். சமூக சேவகர் பென்சி மரகதம் முன்னிலை வகித்தார். அதன் பின் மாணவ மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி கருங்குளம் காமராஜர் தெரு, பாரதியார் தெரு, மாதங்கோயில் தெரு, பாரதியார் தெரு, வழியாக சென்றது. ஆங்காங்கே மரங்கன்றுகள் நடப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்று கொடுக்கப்பட்டது. ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, பியூலா, ஊழியர்கள் சந்திரபுஷ்பம், சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் நம்பிக்கையின் பாலம் தொண்டு நிறுவனம் செய்திருந்தனர்.