செய்துங்கநல்லூரை தூய்மையான கிராமமாக மாற்ற பஞ்சாயத்து நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
செய்துங்கநல்லூர் கருங்குளம் ஒனறியத்தில் வளர்ந்து வரும் நகரமாகும். இந்த நகரத்தில் முக்கிய அலுவலகங்கள் பல உள்ளன. வாரந்தோறும் புதன் கிழமை மிகப்பெரிய சந்தை கூறுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் குப்பைகளும், சாக்கடைகளும் நிறைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்த பொது கழிவறையும் இல்லை. இதனால் தொடர்ந்து சுகாதர மற்ற நகராக இவ்வூர் மாறி வந்தது. இதுகுறித்து பல முறை பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இதனால் மாவட்ட ஆட்சி தலைவர் செய்துங்கநல்லூரை மேம்படுத்த பல நடவடிக்கை மேற்கொண்டு வந்தார். செய்துங்கநல்லூரில் பொது கழிவறை அமைக்க பல நடவடிக்கை எடுத்தும், அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. இதற்கிடையில் செய்துங்கநல்லூர் தனி அலுவலரும் கருங்குளம் ஒன்றிய ஆணையாளருமான பாலசுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் படி செய்துங்கநல்லூர் பொது இடத்தில் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டது. இதை அறிவுருத்தி 10 இடங்களில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையில் பொது இடத்தில் பிளாஸ்டிக்போன்ற பொருள்களை, குப்பையை கொட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும், குடிதண்ணீரை அனுமதி இன்றி எடுக்க கூடாது, மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவுப்பு பலகையை ஊராட்சி செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில் ஊழியர்கள் 10 இடங்களில் வைத்தனர். மெயின்ரோட்டில் 7 இடங்களிலும், பஞ்சாயத்து அலுவலகம், ஆர்.சி.பள்ளி அருகில், வசவப்பபுரம் சாலையில் இந்த விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் செய்துங்கநல்லூர் உள்ள சாக்கடைகளை அகற்றவும் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோலவே பொதுகழிவறை அமைக்க தனி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாக்ஸ் போடலாம்
செய்துங்கநல்லூரை மாதிரி பஞ்சாயத்தாக எடுத்து, முழுவதுமான சுகாதர கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக உள்ளாட்சி துறை, கல்வி துறை, வருவாய் துறை, காவல் துறை இவர்கள் அனைவரும் இணைந்து தனியார் தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு, கண்காணிப்பு கமரா உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தலாம். இதனால் சாலை விபத்து, சாக்கடை நோய், பொது சுகாதரம், திருட்டு பயத்தில் இருந்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தை காப்பாற்றலாம். பொது கழிவறை அமைக்கவும் நடகடிக்கை எடுக்கலாம். இதற்காக உள்ளூர் எம்.எல்.ஏ, எம்.பி. வளர்ச்சித்திட்டங்களை பெற்று விடலாம். இங்குஅனைவரின் பங்களிப்புடன் திட்டம் வெற்றி பெற்ற பின்பு மற்ற பஞ்சாயத்துகளிலும் இதுபோலவே திட்டத்தினை செயல்படுத்தி தூத்துக்குடி மாவட்டத்தினையே சுகாதரமான மாவட்டமாக மாற்றி விடலாம்.


