கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் மருந்து தெளிக்க தெளிப்பானை சேர்மன் கோமதி ராஜேந்திரன் வழங்கினார்.
கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்துகளிலும் கொராண நோய் தடுக்க வேண்டி அனைத்து நடவடிக்கையும் ஒன்றிய அலுவலகம் மூலமாக நடந்து வருகிறது. 31 பஞ்சாயத்துகளிலும் கொராண தடுப்பு பணிகளை கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் எடுத்து வருகிறார். இதன் மூலமாக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் மருந்து, மருந்து தெளிப்பான், கையுரை, முகமுடி கைகழும் மருந்து உள்பட நோய் எதிர்ப்பு மருந்துகள் வழகப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக வழங்கப்பட்ட மருந்து மூலம் பஞ்சாயத்து முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிககப்படடது.
இரண்டாம் கட்டமாக பஞ்சாயத்துகளுக்கு தேவையான உபகரணங்களை சேர்மன் கோமதி ராஜேந்திரன் வழங்கினார். ஆணையாளர் சுப்புலெட்சுமி, கூடுதல் ஆணையாளர் வெங்கிடாசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமணன், ஸ்டீபன் ரத்தினகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் கலியாவூர் சின்னசாமி, ஆழ்வார்கற்குளம் வெங்கடேஷ், சிங்காத்தா குறிச்சி வேலம்மாள், வடக்கு காரசேரி பேச்சியம்மாள், கீழவல்லநாடு சுரேஷ்காந்தி, ஆறாம்பண்ணை சேக் அப்துல்காதர், பூவாணி ரெங்கநாதசுவாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


