
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு மத்திய அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் கடந்த 30ம் தேதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக செய்துங்கநல்லூரில் உள்ள பாதிக்கப்பட்டவரின் தெரு முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. அதன்காரணமாக அந்த தெருவில் வசிக்கும் யாரும் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக அரசி, பருப்பு, எண்ணெய் மற்றும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் இந்த பொருள்களை அனைவருககும் வீடுவீடாக பொருள் வழங்க ஏற்பாடு செய்தார். அதன்படி செய்துங்கநல்லூரில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் 1000 ரூபாயை பெற்றுக்கொண்டு 100 வீடுகளிலும் தள்ளுவண்டியில் கொண்டு வழங்கினார்கள். இதில் துணை வட்டாச்சியர் சங்கரநாரயணன், வருவாய் ஆய்வாளர் இருதயமேரி, பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், கிராம நிர்வாக அதிகாரி சந்தனகுமார், தலையாரி சோமசுந்தரம். கால்வாய் பரணி தமிழர் அறககட்டளை தலைவர் சிவா தலைமையில் 13 பேர் கொண்ட தன்னார்வ தொண்டர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.