கருங்குளம் அருகே ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியாதால் கிளாககுளம் உள்பட பல கிராமங்கள் துண்டிககப்பட்டன.
நெல்லை-திருச்செந்தூர் ரயில் பாதையில் தாதன்குளம் ரயில் நிலையத்துக்கு தென்பகுதியில் கிளாக்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் கிளாக்குளம், அரசர்குளம், வல்லக்குளம், மணல்விளை, புதுக்குளம் என சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். இந்தநிலையில் இந்த நெல்லை&திருச்செந்தூர் ரயில்வே பாதையில் இந்த சாலை ஆளில்லா ரயில்வே கேட்டாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்தது.
அதன்பின்னர் கேட் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் ஒரு வருட காலமாக கிடப்பில் கிடந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் இங்கு அமைக்கப்பட்டிருந்த கேட்டை ரயில்வேத்துறை அதிகாரிகள் மூடிவிட்டு, சுரங்கப்பாதை அமைகக ஏற்பாடு செய்தனர். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3 கோடியே 45 லட்சம் ரூபர்ய செலவில் இதற்கான பணிகள் துவங்கியது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது திடிரென நீரூற்று ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஊற்றுப்பகுதியை கான்கிரிட் மூலம் அடைத்தனர். ஆனாலும் நீரூற்று நிற்கவில்லை. அந்த பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் வேலையை தற்காலிகமாக நிறுத்திச் சென்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள கிளாக்குளம் தீவாக மாறியது. ஊரில் இருந்து வெளியில் செல்வதற்கு பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது இந்த நீரினை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஆனால் ரயில்வே அதிகாரிகள் நீருற்றை அடைப்பதற்காக நீளம் மற்றும் அகலம் உயரத்தினை கான்கிரிட் அமைத்து குறைத்துக்கொண்டே வருகின்றனர். இதனால் இந்த பாதை குறுகலாக மாறி வருகிறது. 20 அடியாக இருந்த பாதை தற்போது 15 அடியாக மாறி வருகிறது. ஆனாலும் நீரூற்று குறையவில்லை. மேலும் பாலம் குறுகலாம் சமயத்தில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்வது தடைபடும். தற்போது சுமார் 6 அடி உயரத்திற்கு தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதுகுறித்து இவ்வூரை சேர்ந்த கண்ணன் கூறும்போது, கடந்த 20.12.12 அன்று எங்கள் ஊரை சேர்ந்த சிறுமி புனிதா இந்த வழியாக பள்ளிககு நடந்து சென்ற போது காமகொடுரனால் கொல்லப்பட்டாள். இதனால் இந்தியா முழுவதும் பரப்பரப்பு ஏற்பட்டது. அப்போது இந்த இடத்தில் ரயில்வே கேட் அமைத்து போககுவரத்து வசதி செய்து தருவதாக கூறினார்கள். ஆனால் 6 வருடகாலமாக போராடி இந்த இடத்தில் சுரங்கபாதை அமைத்து அதுவும் போககுவரத்துககு லாயகற்ற சாலையாக மாறிவிட்டது, ஆளில்லாத ரயில்வே கேட்டாக இருந்தால் கூட ஒரளவு எங்கள் ஊருககு சிறு வாகனத்திலாவது சென்று இருப்போம். தற்போது இருந்த பாதையும் சுரங்க பாதையால் அடைப்பட்டுவிட்டது. தற்போது 15 கிலோ மீட்டர் சுற்றி எங்கள் ஊருககு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக எங்கள் ஊருககு மாற்று சாலை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கூறினார்.
விரைவில் இந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்டுள்ள நீருற்றை நிறுத்தவும், பாலத்தை முறையாக அமைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
இந்த ஊருககு ரயில்வே கேட்டுககு மறுபுரம் தூர்ந்து கிடந்த மங்கம்மாள் சாலையை சீர் செய்தால் போககுவரத்து சீர் அடைந்து விடும் என கருங்குளம் ஒன்றிய அலுவலகம் மூலமாக சாலை ஏற்படுத்தும் திட்டம் மதிப்பீடு தயார்செய்து டெண்டர் விட அனைத்து ஏற்பாடும் நடந்தது. தற்போது அந்த திட்டத்தினை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். மழை காலத்துககுள் மங்கம்மாள் சாலையை சீர் செய்தால் கூட ஒரளவு போககுவரத்து நடந்து விடும். அதை உடனே அரசு நடவடிககை எடுககவேண்டும்.