இராமனுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணபதி தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் வசந்தி முன்னிலை வகித்தார். ஆசிரியர் மைககேல் வரவேற்றார். போட்டிகள் நடந்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுககு பரிசு வழங்கப்பட்டது. மாணவமாணவிகள் கலைநிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுககு மரககன்று வழங்கப்பட்டது. ஆசிரியர் டேனியல் முத்தையா நன்றி கூறினார்.
கருங்குளம் நம்பிககையின் பாலம் சார்பில் குழந்தைகள் தினவிழா நடந்தது. மேலாளர் ஜெபராஜ் தலைமை வகித்தார். சமூக சேவர் பென்சி முன்னிலை வகித்தார். மாணவி தலைவி சுப்பு லெட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி நடந்தது. பேச்சு போட்டி உள்பட பல போட்டிகள் நடந்தது. ஆசிரியர்கள் ஜெயலெட்சுமி, சந்தன மாரி, பியூலா கிரேஸ், சந்திரபுஷ்பம், சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவி துணை தலைவி பார்வதி நன்றி கூறினார்.