கருங்குளம் அருகே கிளாக்குளத்தில் கிராம மக்கள் வெளியூரில் இருந்து யாரும் வரக்கூடாது என செக்போஸ்ட் அமைத்து உள்ளனர்.
கொரானா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதில் கிராம மக்களும் தங்களது பங்குக்கு இணங்க ஏற்பாடு செய்துவருகின்றனர். கருங்குளம் அருகே உள்ள கிளாக்குளம் கிராமத்தில் ஊரின் இரு புறமும் செக்போஸ்ட் அமைத்துள்ளனர். இதை ஊர் இளைஞர்கள் முறை வைத்து இதை கண்காணித்து வருகின்றனர். வெளியூரில் இருந்து யாரும் ஊருக்கு வர அனுமதி கிடையாது . உள்ளூர் மக்கள் வெளியூர் சென்று விட்டு வந்தால் அவர்கள் கைகழுவி விட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செக்போஸ்ட் அருகே தண்ணீர் கிருமி நாசினி போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் ஊர் பிரமுகர்கள் பெரியசாமி, கண்ணன், கணேசன், ஜெபமணி, கணபதி முருகன், உள்பட இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர்.


