செய்துங்கநல்லூரில் பள்ளிவாசலில் வைத்து துப்புறவு பணியாளர்கள் குடும்பத்துக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டது.
உலகை ஆட்டிப்படைக்கும் கொரொனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கரோனா வைரஸின் அபாயத்தில் நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில் செய்துங்க நல்லூரை சேர்ந்த பல்வேறு மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செய்துங்கநல்லூர் பைத்துல்மால் மூலமாக செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து துப்புரவு தொழிலாளர்கள் 10 குடும்பங்களுக்கு ரூபாய் 500 மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்க ப்பட்டது. இந்த பொருள்களை பைத்துல்மால் கௌரவ ஆலோசகர் சாகுல் ஹமீது வழங்கினார். இதில் பைத்துல்மாலின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


