
கொங்கராயகுறிச்சி பொன்னுறுதி அம்மன் சமேத வீரபாண்டிஸ்வர் ஆலயத்தில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. மாலையில் சட்டநாதருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் வளர்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. தொடர்ந்து விளக்கு பூஜை நடந்தது.
சாந்தி தலைமையில் மகளிர் 108 விளககேற்றி வணங்கி நின்றனர். இந்த நிகழச்சியில் பொன்னுறுதி அம்மன் சமேத வீரபாண்டிஸ்வர் ஆன்மீக பேரரவை தலைவர் நடராஜன், உபதலைவர் கிருஷ்ணன், செயலாளர் சின்னதுரை, பொருளாளர் உலகராஜ், ஸ்ரீவைகுண்டம் பக்தசேவை குழு ஸ்ரீராம ஆஞ்சநேயர் சுவாமி பக்த சேவை குழு கே.பி.மாறன், ஜெபமணி, சேர்மத்துரை, முருகன், காட்டுராஜா, வெள்ளூர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.