வல்லநாடு சிவன் கோவிலில் உழவாரப் பணி நடந்தது
தூத்துக்குடி யில் உள்ள ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி அறக்கட்டளை சார்பில் வல்லநாடு அருள்மிகு ஆவுடையம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவிலில் உழவாரப் பணி நடந்தது.
வல்லநாட்டில் உள்ள இந்தக் கோவில் முப்பீட தலங்களில் முதன்மையானது. சிவாலயங்களில் பிரசித்த பெற்ற நவகைலாயங்கள் இருப்பது போன்று நவ லிங்கபுரம் என்று அழைக்கப்படும் சிவாலயங்களில் இககோயில் முதன்மையானது. இக கோவில் மதில் சுவர்களில் முளைத்துள்ள செடி கொடிகளை அகற்றுதல் சுற்றுப்புறங்கள் மற்றும் கோவில் பிரகாரங்களைச் சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகளை உழவாரப்பணிகுழுவின் தலைவர் ராமமூர்த்தி சுவாமிகள் தலைமையிலான தொண்டர்கள் மேற்கொண்டனர்.
மாலையில் கோவில் அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் தலைமையிலான குழுவினர் சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தினர் உழவாரப் பணி களுக்கான ஏற்பாடுகளை மாருதி சேதுராமலிங்கம், பாரதி சங்கரலிங்கம் உள்பட பலர் செய்திருந்தனர்.