உலக களரி அடிமுறை கூட்டமைப்பு சார்பில் நான் களரியை பற்றி எழுதும் மூன்றாவது நூல் இதுவாகும். இந்த நூலைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த களரி ஆசான்களை பற்றியும் அவர்கள் சுவடு இருந்த இடங்களை தேடி அலைந்தும் தெரிந்தும் எழுதிய நூல்.
உலக கலரி அடிமுறை கூட்டமைப்பு நிறுவனர் திரு.ரமேஷ் ரத்னகுமார், இணை நிறுவனர் திரு.சேகர் ஜி மனோகரன் ஆகியோர் ஆகிய இருவரும் கொடுத்த ஊக்கம்தான் என்னை அலைந்து இந்த நூலை எழுத செய்தது. அவர்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் சென்ற போது கிறிஸ்துதாஸ் ஆசானம் அவர் சிஷ்யர்கள் பிரதீப், தனுஷ் ஆசான்களும் எங்களோடு வந்து அனைத்து இடங்களையும் காட்டி நூல் எழுத உதவியாக இருந்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசான்கள் அனைவருடைய பெயர்களையும் பட்டியலிட வேண்டும் என நாம் ஆசைப்பட்டோம். அதற்கு காரணம் உண்டு 19ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்த ஆசான்கள் பல அற்புதமான போர் புரிந்திருக்கிறார்கள். அதனால் அதிர்ச்சி அடைந்த எதிரிகள் களரி அடிமுறையையும் ஆசான்களையும் வளர விடாமல் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே ஆசான்களின் வரலாறுகளை நாம் பட்டியலிடும்போது கல்வி அழிவுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளலாம்.


