இரயில் பயணிகளின் நீண்டகால ஆசையை நிறைவேற்றும் விதமாக தென்னக இரயில்வே எலிசபெத் மகாராணி பயணம் செய்த நீராவி இரயில் எஞ்சின் மீள்ஓட்டத்தை ஸ்ரீவைகுண்டம் முதல் திருச்செந்தூருக்கு விரைவில்இயக்க உள்ளது. இதன் முன்னோட்டமாக நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த சிட்சன், தாம்சன், ஹெவிட்சன் ஆகியோர் 1855-இல் உருவாக்கிய நீராவி இரயில் எஞ்சின் இந்தியாவிற்கு வழங்கப்பட்டு இங்கு 55 ஆண்டுகள் தனது பணியை நீராவி தொடர்வண்டி ஆற்றியது.இந்த தொடர் வண் டியில்தான் எலிசபெத் மகாராணி பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நீராவி தொடர்வண்டியில் இந்தியமக்களும் பயணம்செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
1909-ஆம் ஆண்டு இந்த இந்த நீராவி எஞ்சின் தனது சேவையை நிறுத்தி ஜமால்பூர் மற்றும் ஹௌராவில் உள்ள பனிமனைக்கு அனுப்பப்பட்டு கண்காட்சிப் பொருளானது. 101 ஆண்டுகளுக்கு பின்னர் இயற்கை அழிவினாலும், அதிக அளவு சிதிலமடைந்ததினாலும் தனதுதகுதியை இந்த நீராவிஎஞ்சின் இழந்தது.பின்னர் இந்த நீராவி எஞ்சின் 2010-ஆம் ஆண்டு சென்னைக்குஅருகிலுள்ள பெரம்பூர் பனிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த அழகு தேவதைக்கு உலகிலேயே பழமையான நீராவி எஞ்சின் என்ற சாதனை பெயர் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல கின்னஸ் சாதனையும் இந்த நீராவி எஞ்சின் பெற்றுள்ளது.இந்த சாதனை இயந்திரத்தின் மீள் ஓட்டம் 2010 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரலுக்கும்-ஆவடிக்கும் இடையே இயக்கப்பட்டது.அதன்பின்னர் புதுச்சேரியில் இயக்கப்பட்டது.
தற்போது தென்பாண்டிசீமையிலுள்ள மக்களுக்கு விருந்து படைக்க திருச்செந்தூர் முதல் ஸ்ரீவைகுண்டம் வரை 33 கி.மீ.தொலைவுக்கு தன்னு டைய பாரம்பாpய மகிமையை காட்டவருகிறது.அதன் வௌ;ளோட்டமாகத்தான் நேற்று (09.11.2018) மதியம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதனை இரயில் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். எந்தெந்த நாள்களில் எந்தெந்த நேரங்களில் இயக்கப்படும் என்பதை தென்னக இரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது


