செய்துங்கநல்லூரில் சிவன் கோயிலில் கந்த சஷ்டி விழா நடந்தது.
மிகவும் பழமையான சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயத்தில் கந்தசஷ்டி திருவிழா நடந்தது. இதையொட்டி அம்பாள் மற்றும் சிவனுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. அதன் பின் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. சப்பரத்தில் உற்சவர் முருகனுக்கு அபிசேகம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கோயிலை சுற்றி வலம் வந்தார். தொடர்ந்து கந்தசஷ்டி விழா துவங்கியது.
இதற்கான ஏற்பாடுகளை ஆன்மீக பேரவையினர் செய்திருந்தனர். பூஜைகளை பாலா தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.