தி இந்து தமிழ் திசை வெளியிடான முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தேரிகாட்டு ஜமீன் வரலாறு நூல் அறிமுக விழா செய்துங்கநல்லூர் நூலகத்தில் நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். தொலை தொடர்பு துறை ஓய்வு பெற்ற அதிகாரி முத்துசாமி, ரயில்வேதுறை ஓய்வு பெற்ற அதிகாரி இராஜேந்திரன், முன்னாள் வாசகர் வட்ட தலைவர் ஜுவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சேதுராமன் வரவேற்றார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தி இந்து தமிழ் திசை வெளியீடான தேரிகாட்டு ஜமீன் வரலாறு நூல் அறிமுக விழா நடந்தது. இந்த நூலில் சாத்தான்குளம், நட்டாத்தி ஜமீன்தார் வரலாறு நெல்லை தமிழில் பாட்டி கதைசொல்வது போல எழுதப்பட்டிருப்பதை கோபாலகிருஷ்ணன் திறனாய்வு செய்தார். முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்கினார். இந்த விழாவில் மாசானம், ராமகிருஷ்ணன், முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் துரைராஜ் நன்றி கூறினார்.