
ஆதிச்சநல்லூரில் 3500 ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ்ந்த இடத்தினை தேடி அகழாய்வு நடைபெற்று வருகிறது. மக்கள் புழங்கிய பொருள்கள் கண்டுபிடிப்பு 6 பள்ளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2004 அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்தாக தகவல் வெளிவந்துள்ளது . எனவே விரைவில் அந்த அறிக்கை வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி மாநில அரசு சார்பில் அகழாய்வு பணி துவங்கியது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்ட அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆதிச்சநல்லூரில் 4 குழிகள் அமைத்து அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்றது. இதற்காக பாண்டிய ராஜா கோயில் அருகில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடந்து வருகிறது. கால்வாய் ரோட்டில் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களின் வாழ்விடத்தினை தேடி நான்காவது குழி தோண்டப்பட்டு பணி நடந்து வருகிறது.
முதலில் சிறுசிறு ஓடுகள், மற்றும் வட்ட வடிவில் உலை போன்ற அமைப்பு வெளியே தெரிந்தது. அதை ஆய்வாளர்கள் நுண்ணியமாக அகழ்ந்து ஆய்வு செய்துவருகிறார்கள். கிடைக்கும் பொருள்களை புளியங்குளம் முதுமக்கள் தாழி தகவல் மையம் அருகில் சேர்த்து வருகிறார்கள். கிடைக்கும் பொருள் சம்பந்தப்பட்ட அறிக்கைகள் உடனுக்குடன் சேகரித்து, விவரம் எழுதப்பட்டு வருகிறது.
தொடர்ந்து 21 வது நாளான இன்று வரை அகழாய்வு பணி சிறப்பாக நடந்து வருகிறது. இதற்க்காக தோண்டப்பட்ட இடத்தில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இவை மேல்பகுதியில் சிதைந்தும். கீழ்பகுதி நல்ல நிலையிலும் உள்ளது. இந்த முதுமக்கள் தாழியை பாதுகாப்பாக அகழ்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் அதனருகில் எலும்பு கள் கிடைத்துள்ளது. இதில் உள்ள இரண்டு எலும்பு கூடுகள் கை எலும்பு கூடுகள் போல காட்சி தருகிறது. அவை எரித்து வைக்கப்பட்டது போலவும் தெரிகிறது. இதனால் ஆதிச்சநல்லூர் அகழாய்வு சூடு பிடித்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் 5 வது குழிகள் அமைத்து அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா காரணமாக அலுவலர்கள் குறைவான எண்ணிக்கையில் இந்த பணிகள் நடந்து வந்தது. தற்போது புதிதாக 2 தொல்லியல் மாணவர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் இன்று திங்கள்கிழமை கூடுதலாக வர உள்ளனர்.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் கடந்த 8ம் தேதி 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் மற்றும் 2 கை மூட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதிச்சநல்லூர் பரம்பில் புதிதாக அமைக்கப்பட்ட குழியில் இன்று 3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாழி தற்போது 2 மீட்டர் உயரம் வரை உள்ளது. மேலும் உள்ளே 3 மீட்டர் உயரம் வரை இருக்க கூடும் என்று தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதே குழி அருகே அமைக்கப்பட்ட மற்றொரு குழியில் செஸ் விளையாடும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், அகழ் விளக்குகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் அகழாய்வு இயககுனர் பாஸ்கரன் மற்றும் ஆய்வாளர்கள் பாதுகாப்பான இடத்துககு இடத்து சென்றனர்.
மேலும் முதுமக்கள் தாழிக்குள் அந்த காலத்தில் மனிதனை உட்கார்ந்த நிலையில் மனிததைன வைத்து புதைக்கும் பழக்கம் இருந்த காரணத்தினால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியில் மனித எலும்புகூடு இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் அதே பகுதியில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் இதுவரை நடந்த 5 கட்ட அகழாய்வின் போதும் இறந்தவர்கள் உடலையும், புதைககப்பட்ட முதுமககள் தாழிகளை தேடியும் தான் அகழாய்வு நடந்தது. தற்போது மக்கள் வாழ்ந்த பகுதியை தேடி ஆய்வாளர்கள் அகழாய்வு செய்கின்றனர். இதற்காக வீரளபேரி அருகிலும், ஆதிச்சநல்லூர் குளத்து கரையிலும் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதில் ஆதிச்சநல்லூர் குளத்து அருகில் பனங்காட்டுக்குள் தோண்டப்பட்ட குழி சுமார் 6 அடியை கடந்து சென்று விட்டது. தற்போது இதில் புழகத்தில் இருந்த ஒரு மண்கலயம் கிடைத்துள்ளது . இதனால் ஆய்வாளர் 3500 வருடங்களுக்கும் முன்பு மனிதன் வாழ்ந்த வாழ்விடத்தினை தேடி முயன்ற முயற்சிக்கு வெற்றி கிடைத்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ஆதிச்சநல்லூர் பரம்பு புளியங்குளம் பாண்டு ராஜா கோயில் அருகில் தோண்டப்பட்டஇடத்தில் உலை போன்ற அமைப்பு தென்படுகிறது. இந்த உலையினை முழுவதும் தோண்டும்போது ஆதிச்சநல்லூர் பெருமை மேலும் தென்படும் என ஆதிச்சநல்லூர் ஆய்வாளர்கள் எதிர்பார்ககின்றனர்.