தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி மரககன்று நடும் விழா நடந்தது.
செய்துங்கநல்லூர் கிளையின் சார்பாக நடந்த விழாவிற்கு கருங்குளம் ஒன்றிய செயலாளர் ஒலிம்பிக் மீரான் தலைமை வகித்தார். கிளை பொறுப்பாளர் முஸ்தாக்,பிரகான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் மரக்கன்று நட்டார். இந்த விழாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி முஸம்மில், சமூகநீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் அசார் சமூக ஆர்வலர் சுடலை செய்துங்கநல்லூர் பைத்துல்மால் செயலாளர் நாக்கிப் , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி செய்துங்கநல்லூர் கிளை நிர்வாகிகள் ,பைசல், ஜாவித் ,இம்ரான், ஜாசிர்,செய்யது, ஜலால்,ஹாரிஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


