ஸ்ரீவைகுண்டம் ஆறாம்பண்ணையில் மிலாது நபி விழா நடந்தது.
ஆறாம்பண்ணை முஹைதீன் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் சார்பில் மிலாதுநபி விழா, இஸ்ஸத்துல் ஹைராத் மத்ரஸா ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முஹைதீன் பள்ளிவாசல் தலைவர் முஹம்மதுஉதுமான் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான், துணைச்செயலாளர் அப்துல்கனி, பொருளாளர் அபுல்உசேன், இணைச்செயலாளர் பஷீர்அஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மொன்னாமுஹம்மது வரவேற்றார்.
விழாவினை முன்னிட்டு பட்டிமன்றம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காதர்மீரா சாஹிப் பரிசு வழங்கினார். இதில், தலைமை இமாம்கள் நூருத்தீன், ஷேக்அப்துல்காதர் கல்லூரி முதல்வர் முஹம்மது ஹனீபா, பேராசிரியர் சேக்அப்துல்காதிர், நிர்வாக உறுப்பினர் இமாம்அலி மற்றும் ஜமாஅத்தார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், அராபத் நகர் இமாம் செய்யதுஜாபர் நன்றி கூறினார்.


