
தூத்துக்குடி மாவட்டம் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் நிறுவனம் சார்பில் ஏழை எளிய பெண்கள் மற்றும் விதவை பெண்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச சேலைகள் வழங்கும் விழா நடந்தது.
ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராமசாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ வெங்கடாச்சாரி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், தன்னார்வ தொண்டர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச சேலைகளை வழங்கினார். நிர்வாக பொறுப்பாளர் இராமசந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தன்னார்வ தொண்டர்கள் ஜெயபார்வதி, ஆறுமுகவடிவு, சண்முககனி ஆகியோர் பேசினர். வினோத் நன்றி கூறினார்.