கருங்குளத்தில் இனிப்புகொடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
கருங்குளம் புனித வளன் துவக்கப்பள்ளியில் இன்று பள்ளி திறக்கப்பட்டது. அப்போது புதிதாக சேர்ந்த மாணவர்களை பூங்கொத்து, இனிப்பு கொடுத்து வரவேற்றனர். பள்ளி தாளாளர் ஆரோக்கிய லாசர் தலைமை வகித்தார். பள்ளிதலைமை ஆசிரியர் மரிய ரெஜினா முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர்கள் வனிதா, ஜெயமேரி, சுஜா, கல்பனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


