வல்லநாடு பாரதி பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடநதது.
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் நாகர்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச லென்ஸ் பொருத்தும் கண் சிகிச்சை முகாம் வல்லநாடு பாரதி மழலையர் துவக்கப்பள்ளி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ரத்னம் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட மழலையர் துவக்கப்பள்ளிகள் சங்கத் தலைவர் பாரதி சங்கரலிங்கம் முகாமினை துவக்கி வைத்தார். இந்த முகாமில் கிட்டப்பார்வை தூரப் பார்வை பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. கண் புரை சிகிச்சை செய்து இலவசமாக நவீன லென்ஸ் பொருத்த பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த முகாமில் வல்லநாடு மற்றும் சுற்று வட்டாரப் பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண்டனார். முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சண்முகம் செய்திருந்தார்.


